close
Choose your channels

கொரோனாவை தவிர்க்க தனிமனித பாதுகாப்பு உறுதிமொழி

Friday, March 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தனிமனித உறுதிமொழி குறித்து ஒரு அறிக்கையை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நான்‌, எனது நன்மைக்காக எடுக்க வேண்டிய தொடர்‌ நடவடிக்கைகள்‌

1. நான்‌ பொது போக்குவரத்தில்‌ பயணம்‌ செய்ய மாட்டேன்‌.

2. நான்‌ எந்த பொது நிகழ்ச்சிகளிலும்‌, கூட்டங்களிலும்‌ கலந்து கொள்ள மாட்டேன்‌.

3). நான்‌ திரையரங்களுக்கோ, உணவகங்களுக்கோ செல்லமாட்டேன்‌.

4. நான்‌ உணவகங்களிலிருந்து உணவினை வீட்டிற்கு வரவழைக்க மட்டேன்‌.

5. நான்‌ உடற்பயிற்சி கூடங்களுக்கோ, நீச்சல்‌ குளத்திற்கோ செல்ல மாட்டேன்‌.

6). நான்‌ மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லும்‌ பொழுது, இரு கைகளை கூப்பி வணங்குவேன்‌.

7). நான்‌ என்‌ முகத்தை தொடுவதற்கு முன்‌ கைகளை நன்கு கழுவுவேள்‌.

8). நான்‌ பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்‌ படி, ஒரு நாளைக்கு 10 முதல்‌ 15 முறை, 20
நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுவேன்‌.

9). நான்‌ பொது இடங்களில்‌ கைப்படும்‌ இடங்களை தொடுவதை தவிர்ப்பேன்‌.

10). நான்‌ பொது இடங்களுக்கு அவசியமில்லாத காரணங்களுக்கு செல்வதை தவிர்ப்பேன்‌.

இச்சூழ்நிலையில்‌ பொது மக்கள்‌ நலமுடன்‌ இருக்க தன்‌ சுத்தம்‌ பேணுதல்‌ முறைகளை கையாளவேண்டும்‌ என்பதில்‌ நாள்‌ உறுதியாக இருக்கிறேன்‌.

மேற்கண்ட அம்சங்கள் கொண்ட தனிமனித உறுதி மொழியை ஒவ்வொருவரும் எடுத்து கொள்ள வேண்டுமென தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos