தினசரி பெட்ரோல்-டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலைகளை பெட்ரோல் நிலையங்களில் உள்ள எல்.ஈ.டி. திரையில் தினசரி மாற்றி அமைக்கப்படும். மேலும் தினசரி விலையை தெரிந்து கொள்ள என்றே இலவச டோல் எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ செயலியான Fuel@IOC என்ற செயலியில் தினசரி விலைகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும்.

மேலும் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளங்களில் லாகின் செய்தும் விலையை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி இந்த இணையதளத்தில் உள்ள டீலர்கள் கோட் எண்ணை குறிப்பிட்டு அதாவது RSP< SPACE >DEALER CODE என்று குறிப்பிட்டு 9224992249 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்தால் பெட்ரோல், டீசல் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

More News

ஆர்.கே.சுரேஷின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், அதன் பின்னர் 'மருது', 'தர்மதுரை', ஆகிய படங்களில் நடித்தார்...

சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் திடீர் கைது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இன்று பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் கூடியது. இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது...

இன்று முதல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இன்னும் பத்து நாட்கள் பேட்ச்வொர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

'பாகுபலி' போன்ற படம் இயக்குவதை மிஸ் செய்தது எப்படி? சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் சுசீந்திரன் 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா, 'பாண்டியநாடு', ஆதலினால் காதல் செய்வீர்', பாயும் புலி' போன்ற வெற்றி படங்களை இயக்கி இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அதர்வா தற்போது 'செம போத ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்...