close
Choose your channels

ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா

Wednesday, June 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அதர்வா தற்போது 'செம போத ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இதே நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் 'ஈட்டி' என்ற வெற்றி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' மற்றும் ஜீவா நடித்து வரும் 'கீ' ஆகிய படங்களை அடுத்து அதர்வா நடிப்பில் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை 'டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ளார்.

காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாகவுள்ள இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஒரு ஸ்போர்ட்ஸ்மேனின் கதையை ரசிகர்கள் கண்முன் நிறுத்திய இந்த 'ஈட்டி' கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.