சிவகங்கையில் எச்.ராஜா? எதிர்த்து போட்டியிடுபவர் யார்?

தூத்துகுடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு முக்கிய தொகுதியான சிவகெங்கையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். எனவே இந்த தொகுதியில் தனது மகனை வேட்பாளராக்க செந்தில்நாதன் முயற்சி செய்ததாகவும், ஆனால் பாஜக மேலிட செல்வாக்கை வைத்து எச்.ராஜா, இந்த தொகுதியை கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த முறை ப.சிதம்பரம் அல்லது கார்த்திக் சிதம்பரம் இருவரில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

நாடாளுமன்ற தேர்தல்: ஜெ.தீபா அதிரடி முடிவு

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்து போட்டியிடவும் வியூகம் அமைத்து வருகிறது.

மதுரவாயல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது சென்னை கல்லூரி மாணவியா? திடுக்கிடும் தகவல்

சென்னை மதுரவாயல் அருகே உள்ள ஏடிஎம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஏடிஎம்-இல் பணம் நிரப்பி கொண்டிருந்த ஊழியர்களை கத்தியால் தாக்கி கொள்ளையடித்தனர்.

நியூசிலாந்து துப்பாக்கி சூடு: நூலிழையில் உயிர்தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்து நாட்டில் சற்றுமுன்னர் மர்மநபர் ஒருவர் மசூதி ஒன்றில் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும்

இந்த கேள்வியெல்லாம் உங்களுக்குத்தான் மிஸ்டர் சி.எம்! கமல்ஹாசனின் ஆவேச வீடியோ

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து மற்ற ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிடும் முன்னரே கமல்ஹாசன் இந்த விஷயத்தில் போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

வாரம் 2 நாள் லீவு விடுங்க: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் விவேக்

செல்போன், இண்டர்நெட் என்று வந்ததோ அன்றுமுதல் பெற்றோர் உள்பட உறவுகளிடம் பேசுவதே குறைந்து விட்டது