நல்ல கதையா திருடுங்கடா!...எச்.ராஜாவின் 'சர்கார்' டுவீட்?

  • IndiaGlitz, [Wednesday,November 07 2018]

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தை ஹிட்டாக்கிய பெருமை எச்.ராஜாவையும் சேரும் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய் நடித்த அடுத்த படமான 'சர்கார்' படம் குறித்து இதுவரை எச்.ராஜா உள்பட பாஜக தலைவர்கள் பெரிய அளவில் பேசவில்லை.

இந்த நிலையில் தற்போது எச்.ராஜா டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் 'படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா' என்று பதிவு செய்துள்ளார்.

எச்.ராஜாவின் இந்த பதிவு சமீபத்தில் நடந்த 'சர்கார்' திருட்டுக்கதை பிரச்சனை குறித்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 'சர்கார்' படத்திற்கு ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் 'மெர்சல்' போலவே இந்த படத்தையும் எச்.ராஜா ஹிட்டாக்கிவிடுவார் போல தெரிகிறது' என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.

More News

நட்புக்கு டைட்டிலில் மரியாதை கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி!

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில் தற்போது வெளிவந்துள்ளது.

சிம்பு படத்தின் டைட்டிலாக மாறிய 'சிசிவி' மாஸ் வசனம்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த சிசிவி என்ற 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்புவுக்கு ஒரு மாஸ் வசனம் உண்டு.

கமல்-விக்ரம் இணையும் படத்தின் மாஸ் டைட்டில்

கமல்ஹாசன் விரைவில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும்

'விஸ்வாசம்' படப்பிடிப்பின்போது டான்சர் திடீர் மரணம்: அஜித்தின் மனிதாபிமான நடவடிக்கை

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருப்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நடிகை ரம்பா மகனின் முதல் புகைப்படம்

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ரம்பா, கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.