கூவத்தூரில் நடந்ததை கூற தயார்! கருணாஸ் மிரட்டலால் ஆளும்கட்சி அதிர்ச்சியா?

  • IndiaGlitz, [Saturday,September 29 2018]

முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை தவறாக பேசியது மற்றும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது ஆகிய இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட கருணாஸ் இன்று காலை ஜாமீனில் வெளிவந்தார்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தனது அமைப்பின் பிரதிநிகளுடன் இன்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்த கருணாஸ் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'கூவத்தூர் ரிசார்ட்டில் என்ன நடந்தது என்பதை ஐகோர்ட் அனுமதி அளித்தால் அனைத்தையும் கூறத்தயார் என்று கூறினார்.

தமிழக முதல்வர் பதவியை சசிகலா கைப்பற்ற முயற்சித்தபோது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனனவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கே என்ன நடந்தது? என்பது இன்று வரை மர்மமாக இருக்கும் நிலையில் கருணாஸ் இதனை வெளிப்படையாக கூறினால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என ஆளுங்கட்சி அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

சென்னையில் கேரள போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு: பெரும் பரபரப்பு

சென்னை விருகம்பாகத்தில் கேரள போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்புவின் வெறித்தனமான ரசிகர் எடுத்த ரிஸ்க்

கோலிவுட் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்

ஒவ்வொரு வருடமும் கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து வருவது விஜய்சேதுபதியும், ஜிவி பிரகாஷூம்தான்.

அரசியலிலும் விருதினை குவிக்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இதுவரை 'மூன்றாம் பிறை', 'நாயகன்' மற்றும் 'இந்தியன்' ஆகிய மூன்று படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி

பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் நேற்றிரவுடன் வாக்குப்பதிவு செய்யும் முறை முடிந்துவிட்டது.