என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி வரியை தவிர வேறு எந்த வரியும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் இன்னும் ஜிஎஸ்டி வரியுடன் கேளிக்கை வரியையும் சேர்த்து தான் பார்வையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 'சகுந்தலாவின் காதலன்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதுகுறித்து நடிகர் விஷால் பேசினார். அவர் கூறியதாவது:

மாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

More News

வேற லெவலில் சூர்யாவின் பிறந்த நாள்: விக்னேஷ் சிவன்

சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

வேலைநிறுத்தத்திற்கு பின் 'இவன் தந்திரன்' படத்தின் வசூல் எப்படி?

கடந்த மாதம் 30ஆம் தேதி கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடித்த 'இவன் தந்திரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது...

'விவேகம்' படத்தின் 'தலை விடுதலை' பாடல் வரிகள்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள 'விவேகம்' படத்தின் சிங்கிள் பாடலான 'தலை விடுதலை' பாடல் நேற்று வெளியானது...

விஜய்சேதுபதி-மாதவன் நடிக்கும் 'விக்ரம் வேதா: திரை முன்னோட்டம்

கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் 'ஓரம்போ', 'வா' ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ள நிலையில் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் 'விக்ரம் வேதா'.

'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்': திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகம் தற்போது த்ரில்லர்+காமெடி டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் இந்த டிரெண்டிங்கில் உருவாகியுள்ள இன்னொரு படம் தான் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்ற படம்