close
Choose your channels

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கே எனது ஆதரவு: ரஜினி பட இயக்குனர் அறிவிப்பு..!

Wednesday, September 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உதயநிதிக்கு எதிராக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் பேசி வருகின்றனர். ஒரு படி மேலே போய் உபி மாநில சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உதயநிதிக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ உட்பட சில வெற்றி படங்களை இயக்கிய பா. ரஞ்சித்.

இது குறித்து அவர் கூறிய போது ’சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதியின் கருத்து பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை. சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் மனிதாபிமற்ற செயல்களின் வேர்கள் சனாதன தர்மத்தில் உள்ளன.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர், தந்தை பெரியார் போன்ற சாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்

அமைச்சரின் அறிக்கையை திரித்து, இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாக பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.