அஜித்தை சந்தித்தால்... ஆசையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாராய்

  • IndiaGlitz, [Thursday,July 25 2019]

அஜித்தை நேரில் சந்தித்தால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அஜித்தும் ஐஸ்வர்யாராயும் '‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ என்ற படத்தில், இணைந்து நடித்துள்ளனர். இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐஸ்வர்யாராய், ''கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்தில் நானும் அஜித்தும் நடித்திருந்தாலும் அவருடன் நிறைய காட்சிகளில் நான் நடிக்கவில்லை. இருப்பினும் படப்பிடிப்பில் அவரை சந்தித்திருக்கிறேன். படப்பிடிப்பின் போது அவரது குடும்பத்தை சந்தித்ததும் என் நினைவில் உள்ளது. மீண்டும் அவரை சந்தித்தால், அவரது இந்த தகுதியான வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார்.

மேலும் அஜித், மிக மென்மையான, அற்புதமான மனிதர் என்றும், ரசிகர்களிடம் அவர் பெற்றிருக்கும் இந்த அன்பையும், வெற்றியையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ரசிகர்கள் இந்த அளவுக்கு அவர் மீது அன்பு வைத்திருக்கின்றனர் என்றால் அந்த அன்புக்கு அவர் தகுதியானவர் என்றும் ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஐஸ்வர்யாராய், 'அவர் எந்த படம் இயக்கினாலும் அதில் தான் நடிப்பேன் என்றும் அவர் எனது குரு மட்டுமின்றி குடும்ப நண்பரும் கூட என்றும் ஐஸ்வர்யாராய் தெரிவித்தார்
 

More News

மிர்ச்சி சிவாவுக்கு கிடைத்த புரமோஷன்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தமிழ்ப்படம்', ''கலகலப்பு', 'தில்லுமுல்லு', 'உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் மிர்ச்சி சிவா.

பாஜகவில் இணையும் ரஜினி, கமல் பட நடிகை

பிரபல தெலுங்கு நடிகையும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'வள்ளி', கமல்ஹாசன் நடித்த 'பாசவலை' உள்பட பல படங்களில் நடித்தவருமான நடிகை பிரியா ராமன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வந்துள்ளது 

மீராமிதுன் இன்னொரு வழக்கு: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது போலீஸ்

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமாகிய மீராமிதுன் மீது ஏற்கனவே ரஞ்சிதா என்ற பெண் ரூ 50 ஆயிரம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக

'நேர் கொண்ட பார்வை' - பிங்க் படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸாகும் இரண்டு முன்னணி நடிகைகளின் படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஜூலை 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் தற்போது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு