'பீஸ்ட்' முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்: முதல்வர் குடும்பத்தின் பிரபலம் பேட்டி! 

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மருமகளும், உதயநிதி ஸ்டாலினின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன் என்று கூறியுள்ளார்

சமீபத்தில் அளித்த பேட்டியில் ’பீஸ்ட்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் நெல்சன் மற்றும் விஜய் ஆகிய இருவருக்குமே காமெடி சென்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த படத்தில் ரசிக்கும் வகையில் காமெடி இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் ’வணக்கம் சென்னை’, ‘காளி’ போன்ற படங்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி தற்போது, ‘ பேப்பர் ராக்கெட்’ என்ற தொடரை இயக்கி வருகிறார் என்பதும், காளிதாஸ் ஜெயராமன், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள இந்த தொடர் ஜீ5 தமிழில் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சாலைமறியல் செய்த விஜய் ரசிகர்களை விரட்டியடித்த போலீஸ்: கடலூரில் பரபரப்பு!

கடலூரில் திடீரென சாலை மறியல் செய்த விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டி அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? விஜய்க்கு கேள்வி எழுப்பிய பிரபலம்!

உங்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என நடிகர் விஜய்க்கு பிரபலம் ஒருவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு': பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில்!

பிரபல இயக்குனரின் அடுத்த பட டைட்டில் 'மாநாடு' திரைப்படத்தின் மாஸ் வசனமான,  'வந்தான் சுட்டான் ரிப்பிட்டு' என வைக்கப்பட்டுள்ளது 

அடுத்த பாட்டை ரிலீஸ் பண்ணலாமா? அனிருத் கொடுத்த 'பீஸ்ட்' மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சிவகுமாருடன் நடித்த நாயகிகள்: வைரலாகும் குரூப் போட்டோ!

பழம்பெரும் நடிகரும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான நடிகர் சிவக்குமாருடன் நடித்த நடிகைகளின் குரூப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.