close
Choose your channels

நான் விஜய் படத்தை இயக்கினால் தீபிகா படுகோன் தான் ஜோடி.. பிரபல நடிகர்..!

Sunday, September 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் ஆவலுடன் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் நான் விஜய்யை வைத்து படம் இயக்கினால் தீபிகா படுகோன் தான் ஜோடி என்று தெரிவித்துள்ளார். அந்த பிரபல நடிகர் விஷால்.

விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்தை விஷால் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் விஜய்யும் விஷால் உடன் இணைந்து தகுந்த நேரத்தில் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து விஷால் கூறியபோது, ‘விஜய் அளவுக்கு சினிமாவில் மோசமான விமர்சனங்களை எதிர் கொண்டவர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவர் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வெற்றியை பதிலாக அளித்தார். அவரைப் பற்றி தவறாக எழுதிய பத்திரிகைகள் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியது. அதுதான் விஜய்யின் வெற்றி

விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை உள்ளது, ஒருவேளை அது நடந்தால், அந்த படத்தில் தீபிகா படுகோன் தான் விஜய்க்கு ஜோடியாக இருப்பார் என்று கூறியுள்ளார். விஜய் நடிக்கும் படத்தை விஷால் இயக்குவாரா? அந்த படத்தில் தீபிகா படுகோனே ஜோடியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment