close
Choose your channels

'கோட்' படத்திற்கு சம்மதம்.. 'தலைவர் 171' படத்திற்கு மறுப்பு.. பிரபல நடிகரின் முடிவுக்கு என்ன காரணம்?

Wednesday, April 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து ’கோட்’ ரோட் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் மோகன் நடித்துள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர் மைக் மோகன் என்பதும் இவர் ஏராளமான வெற்றி படங்களை தந்துள்ளார் என்பதும் தெரிந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவர் ’ஹரா’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் ‘தலைவர் 171’ படத்திலும் அவர் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் மோகனுக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது மோகன் கதாநாயகனாக ’ஹரா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென விஜய்யின் ’கோட்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து அவர் அந்த படத்தில் நடித்தார். விஜய்யின் ’கோட்’ படத்தில் அவர் நடித்த பிறகு வேறு சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்த போதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினர். '

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 171’ படத்திலும் மோகன் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்தி குறித்து கூறிய போது, ரஜினியின் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து இதுவரை மோகனிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, ஒருவேளை அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் மோகன் தரப்பில் தெரிவித்தனர்.

எனவே இப்போதைக்கு ‘தலைவர் 171’ படத்தில் மோகன் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment