உங்களிடம் 2 ரூபாய் நோட்டு இருக்கிறதா??? அப்போ நீங்கதா கோடீஸ்வரர்!!!
சில ஆண்டுகள் முன்பு வரை 2 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துக் கொடுத்து வந்தது. ஆனால் அந்த நோட்டுகளை இப்போதெல்லாம் கண்ணால் கூட பார்க்க முடிவதில்லை. அத்தகைய பழைய ரூபாய் நாணயங்களை வாங்கி விற்பதற்காக பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
இந்த நிறுவனங்களில் தங்களின் நாணயங்களை விற்பனை செய்வதற்காக பலர் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து தளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி உருவாக்கும் தளங்களில் சில இலக்கம் கொண்ட எண்களுக்கு அதிக மவுசு இருப்பதாக தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு 2 ரூபாய் நோட்டுகளில் 786 இலக்கம் கொண்ட நோட்டு கிடைத்தால் அதற்கு கோடி ரூபாய் கொடுப்பதற்கும் சிலர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரூபே, இந்தியன் ஓல்ட் நாணயம், இந்தியா கிளிக் போன்ற தளங்கள்தான் இத்தகைய வர்த்தகத்தை செய்து வருகின்றன ஒருவேளை உங்கள் கைக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள 2 ரூபாய் தாள் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலியா என சோதித்து பார்த்துவிடுங்கள். அதேபோல 1 ரூபாய் தாள், பழைய நாணயங்கள் என எது கிடைத்தாலும் இனிமேல் அதை இதுபோன்ற ஆன்லைன் தளங்களுக்கு சென்று விற்று பணக்காரராக மாறி விடுங்கள்.