யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். மகளிர் ஆணையத்திற்கு கமல் பதில்

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

சமீபத்தில் பிரபல மலையாள நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கு சம்பந்தமாக அவரது பெயரை கூறி கருத்து சொன்ன கமல்ஹாசனுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'நான் பெண்கள் மீது அன்பு செலுத்தி அவர்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். காரணம் இன்றி நான் யாருக்கும் வளைந்து கொடுக்க மாட்டேன். குற்றவாளியை விட்டுவிட்டு வழக்கறிஞரை தண்டிப்பது போல் அவர்களது கோரிக்கை உள்ளது.

பலாத்கார வழக்கில் நடிகையின் பெயரை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் கூறுகின்றனர். உங்களுடைய கடவுளை தவிர சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை. நான் அவர் பெயரை கூற கூடாதா? என்னுடைய தாய்க்கும், மகளுக்கும் அடுத்தபடியாக அவரை நினைத்தேன். மகாபாரதத்தில் உள்ள ஏகலைவனிடம் யுத்தம் செய்வது போல் உள்ளது' என்று கமல் கூறியுள்ளார்.

More News

விண்வெளியில் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 'சரஸ்வதி'

இந்தியா விண்வெளித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வரும் நிலையில் புனேவில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் சூரியனை விட 20 மில்லியன் பில்லியன் மடங்கு அதிக அடர்த்தி கொண்ட கேலக்ஸி என்று கூறப்படும் புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு விஞ்ஞானிகள் சரஸ்வதி என்று பெயரிட்டுள்ளனர்.

மலையாள நடிகை வழக்கு: நடிகர் திலீப்புக்கு மேலும் ஒருநாள் காவல் நீடிப்பு

பிரபல மலையாள நடிகை பாலியல் துன்புறத்தல் வழக்கில் கடந்த 11ஆம் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு அனுமதி அளித்து அங்காமலி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மலையாள நடிகை கடத்தல் விவகாரம்: கமல்ஹாசனுக்கு நோட்டீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி குறித்து ஒரு அமைப்பு போலீஸ் புகார் கொடுத்ததற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று முன் தினம் இரவு கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்...

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை மிரள வைத்த தல அஜித்!

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கியமான பைக் ஸ்டண்ட் குறித்து இயக்குனர் சிவா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார்...

தமிழக அரசின் திரைப்பட விருது: இயக்குனர் சுசீந்திரன் வருத்தம்

கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழக அரசு திரைப்பட விருதுகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த நிலையில் நேற்று மொத்தமாக 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது...