close
Choose your channels

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை மிரள வைத்த தல அஜித்!

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் முக்கியமான பைக் ஸ்டண்ட் குறித்து இயக்குனர் சிவா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டருக்கு அஜித் ஒரு பைக் ரேஸர் என்பது தெரியாது. எனவே அவர் அஜித்திடம் பைக் ஸ்டண்ட் குறித்தும் பைக்கை சுழற்றி நிறுத்த வேண்டியது குறித்தும் அஜித்திடம் சுமார் அரை மணி நேரம் விளக்கினார். அவர் கூறியதை அமைதியான கேட்டுக்கொண்ட அஜித், நான் ஒரு ரவுண்டு பைக்கில் சுற்றவா? என்று ஸ்டண்ட் மாஸ்டரிடம் அனுமதி கேட்டு அட்டகாசமாக பைக்கில் ஒரு ரவுண்ட் அடித்து ஸ்டண்ட் மாஸ்டர் கூறியபடியே ஸ்பின் அடித்து நிறுத்தினார்.

இதை பார்த்தவுடன் அந்த ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் மிரண்டு போய்விட்டாராம். எனக்கு தெரிந்து நான் பார்த்ததிலேயே பெஸ்ட் ஆக்சன் நடிகர் இவர்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறினாராம். ஒரு பெரிய ஸ்டார் மற்றும் பைக் ரேஸர் ஒருங்கே கிடைத்தது இந்த படத்திற்கும், எங்கள் டீமுக்கும் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் சிவா பெரிமிதத்துடன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.