பிறந்த நாளில் இசைஞானி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதுதான்!

இசைஞானி இளையராஜா நேற்று தனது 76வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். கமல்ஹாசன் உள்பட பல பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் சமூக வலைத்தளங்கள் மூலமும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் இசைஞானிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் எப்படி நன்றி கூறுவதே தெரியவில்லை என்று கூறிய இளையராஜா, தன்னுடைய பிறந்த நாளன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் அறிவித்தார். அந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் சங்கத்திற்கான கட்டடத்தை எனது சொந்த செலவில் கட்டித்தர இருக்கிறேன் என்று ஒரு அறிவிப்பை இசைஞானி இளையராஜா நேற்று நடைபெற்ற தனது பிறந்த நாள் இசைநிகழ்ச்சியில் வெளியிட்டார். இந்த அறிவிப்பால் தென்னிந்திய திரையிசை கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 

More News

இந்தி எதிர்ப்பை புத்திசாலித்தனமான புரமோஷனில் காட்டிய 'கொரில்லா' படக்குழு

தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல்வாதிகளுக்கு போராட்டம் செய்யவும், அறிக்கை விடவும் காரணம் இன்றி தவித்த நிலையில் அவர்களுக்கு கைகொடுத்த விவகாரம் தான்

இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

'காலா 2' படம் குறித்து பா.ரஞ்சித்தின் முக்கிய அறிவிப்பு

நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி சினிமாவிலும் தலித் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கினார்

நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து கூறிய நடிகைக்கு நேர்ந்த சிக்கல்!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின்னர் இந்தியாவின் பெண் நிதியமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில்

பிறந்த நாளை முன்னிட்டு இசைஞானி வெளியிடும் முக்கிய அறிவிப்பை!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இன்று 76வது பிறந்தநாள். அவருக்கு திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து துறையினர்களும் இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.