close
Choose your channels

23 ஆண்டுகளுக்கு பின் பிரபல நடிகரின் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

Friday, November 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட கிட்டத்தட்ட அனைத்து பிரபல நடிகர்களின் படங்களுக்கும் இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிரபல நடிகரின் படத்திற்கு 23 ஆண்டுகள் கழித்து இசைஞானி இளையராஜா இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ’சாமானியன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராகேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராமராஜன், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ’கரகாட்டக்காரன்’ உள்பட பல ராமராஜன் நடித்த திரைப்படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் எப்போதும் கடைசியாக அவர் 1999ஆம் ஆண்டு ராமராஜன் நடித்த ’அண்ணன்’ என்ற திரைப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ராமராஜனின் படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளதை அடுத்து மரியாதை நிமித்தமாக இளையராஜாவை ராமராஜன் சந்தித்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ராகேஷ் கூறியபோது இந்த படத்தின் கதையை எழுதி முடித்தவுடன் ராமராஜன் அவர்கள் தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்பதை முடிவு செய்தேன். அவரை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை. இந்த படம் அவருக்கு மிகச்சிறந்த ரீஎண்ட்ரி படமாக இருக்கும் என்று கூறினார்

மேலும் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ராமராஜன், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறினார். ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இந்த படத்தின் பாடல்களை சினேகன் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos