விஜய் தந்தைக்கு என்னதான் நடந்தது? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 24 2016]

இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கேரளாவில் கார் விபத்தில் காயம் அடைந்ததாகவும், தலையிலும் கழுத்திலும் படுகாயம் ஏற்பட்டதால் அவர் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஒருசில மணி நேரங்களாக வதந்திகள் பரவி வருகின்றன.
ஆனால் உண்மையில் அவருக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. கேரளாவில் தனது அடுத்த படம் குறித்து கதை விவாதத்தில் இருந்ததாகவும் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் பாத்ரூமில் இருந்து தவறி விழுந்ததால் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பினர் கூறியபோது "அவருக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை. இது முற்றிலும் தவறான செய்தியாகும். குளித்துவிட்டு வரும்போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமுடம் உள்ளார்" என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

More News

'விஜய் 60' பட டைட்டில் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 60' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது...

அருண்விஜய்யின் 'குற்றம் 23' இசை வெளியீடு தேதி

அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு இணையாக விக்டர் என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்த அருண்விஜய்க்கு...

'கபாலி' ரசிகர்களுக்கு இன்று ஒரு இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூலில் புதிய சாதனை செய்தது...

சூப்பர் ஸ்டாருக்கு நன்றி சொன்ன வெள்ளி மங்கை

இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி.சிந்து, ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றதால் நாடே அவரை தூக்கி வைத்து கொண்டாடிய நிலையில் நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

ரஜினியின் கேரக்டருக்கு மாறிய கமல் சகோதரர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது அனைவரும் அறிந்ததே...