close
Choose your channels

ரூ.100 கோடி வசூல் படம் உட்பட எத்தனை படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

Thursday, June 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ஏற்கனவே ரிலீஸ் ஆன திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் 100 கோடி ரூபாய் திரையரங்குகளில் வசூலித்து சாதனை செய்த ’அரண்மனை 4’ உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

சுந்தர் சி இயக்கத்தில் அவரே முக்கிய வேடத்தில் நடித்து தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவான ’அரண்மனை 4’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாக உள்ளது. திரையரங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதைப்போல் அர்ஜுன் தாஸ் நடித்த ’ரசவாதி’ என்ற திரைப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது இந்த படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷில்பா மஞ்சுநாத் முக்கிய இடத்தில் நடித்த ’சிங்க பெண்ணே’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் இந்த வாரம் வெளியாகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பார்க்க ரெண்ட் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட 3 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் மற்ற மொழி படங்கள் குறித்த தகவல் இதோ:

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ‘நடிகர்’ என்ற மலையாள திரைப்படமும், அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘ராதா மாதவம்’ என்ற தெலுங்கு படமும், ‘கம் கம் கணேஷா’ என்ற தெலுங்கு படமும் நாளை முதல் ஒளிபரப்பாகிறது. மேலும் ஹாட்ஸ்டாரில் ‘பேட் காப்’ என்ற இந்தி ஒரிஜினல் சீரிஸ் இந்த வாரம் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment