close
Choose your channels

சித்தார்த்தின் 'சித்தா' உட்பட எத்தனை படங்கள்? இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்..!

Thursday, November 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போல் ஓடிடியில் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் சித்தார்த் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ’சித்தா’ என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலிலும் சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த ஆண்டு வெளியான வெற்றி நடிப்பில் உருவான ’ஜோதி’ என்ற திரைப்படம் நாளை ஆகா ஓடிடியில் வெளியாக உள்ளது. கிருஷ்ண பரமாத்மா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வெற்றி, ஷீலா குமார் உட்பட பலர் நடித்திருந்தனர்

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் மட்டுமின்றி ’கோஸ்ட்’ என்ற கன்னட திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவராஜ்குமார், ஜெயராம், அனுபம்கெர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த ’கண்ணூர் ஸ்குவாட்’ என்ற மலையாள படமும் நாளை ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘தீப்பொறி பென்னி’ என்ற மலையாள திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment