close
Choose your channels

'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்பட 3 தமிழ் படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

Thursday, August 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த வாரம் திரையரங்குகளில் சந்தானம் நடித்த 'கிக்’ வெளியாக இருக்கும் நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’டிடி ரிட்டர்ன்ஸ்’ நாளை ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்த ‘இன்ஃபினிட்டி’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படம் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் விஜய் டிவி பிரபலம் ராஜ்மோகன் இயக்கத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி அடித்த ‘பாபா பிளாக் ஷீப்’ என்ற திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் ‘நல்ல நிலவுல்ல ராத்திரி’ என்ற மலையாள படம் அமேசான் பிரைம் தளத்தில் இந்த வாரம் வெளியாகிறது. அதேபோல் ‘நீரஜா’ என்ற மலையாள படமும், ’நிஜமும் பின்னொரு நிஜமும்’ என்ற மலையாள படமும் HR ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் ஹாட்ஸ்டாரில் ‘தி ப்ரீலான்சர்’ என்ற வெப் தொடர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment