close
Choose your channels

இந்த வார ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்..!

Wednesday, June 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நான்கு தமிழ் படங்கள் ஓடிடியில் வெளியாக இருப்பதை அடுத்து ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கிறது என்று தெரிய வருகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான ’வீரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

அதேபோல் மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்த மணிகண்டன் நடித்த ’குட் நைட்’ திரைப்படம் இந்த வாரம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது.

மேலும் விமல் நடித்த ‘குலசாமி’ என்ற திரைப்படம் சமுத்திரக்கனியின் ’விமானம்’ திரைப்படம் ஜி5 ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜியோ சினிமாவில் ’Sergeant’ என்ற ஹிந்தி திரைப்படமும், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமன்னாவின் ’LustStories 2’ என்ற திரைப்படம், ஆஹா ஓடிடியில் ’Ninnu Chere Tharunam’ என்ற தெலுங்கு திரைப்படம், சிம்ப்ளி சவுத் ஓடிடியில் ’Ntikkakkakkoru Premondarnn’ என்ற மலையாள திரைப்படம் இந்த வார ஓடிடி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment