'லவ்வர்' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு குஷி..!

  • IndiaGlitz, [Thursday,March 28 2024]

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ’லவ்வர்’ திரைப்படம் உள்பட 3 தமிழ் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மணிகண்டன், கௌரி பிரியா உள்பட பலர் நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் உருவான ’லவ்வர்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று முதல் வெளியாகிறது

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் மார்ச் ஒன்றாம் தேதி வெளியான நிலையில் இந்த படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது

மேலும் சபீர், மிர்னா, வரலட்சுமி, இந்திரஜித், பொற்கொடி, தீப்தி உள்பட பலர் நடித்துள்ள ’பர்த் மார்க்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெளியான நிலையில் இந்த படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 தமிழ் படங்களும் இந்த வாரம் வெளியாக இருப்பதால் ஓடிடி ரசிகர்களுக்கு குஷி என தெரிகிறது

மேலும் ஆஹா ஓடிடியில் ‘சுந்தரம் மாஸ்டர்’ என்ற தெலுங்கு படமும், அமேசான் ப்ரைமில் ‘ரேப்பிட் ஆக்சன் மிஷன்’ என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது. மேலும் சில இந்தி, ஆங்கில படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

More News

அபூர்வ சிங்கீதம் ஓர் இனிய தொடக்கம்.. கமல்ஹாசனின் நெகிழ்ச்சியான பதிவு..!

கமல்ஹாசன் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான நான்கு திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கான விழா ஒன்றை கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

மக்களவை தேர்தலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்...இதன் பிண்ணனி என்ன?

அன்றைய சூழ்நிலைக்கு நடித்த ரனாவத்,பார்வையாளர்களால் அதிகமாக ஈர்க்கப்பட்டு வெகுவான கரகோஷத்தை பெற்றவர். நெப்போட்டிஷம் என்னும் வார்த்தையை அறவே வெறுப்பவர்.அதன் மூலம் வரும் வாய்ப்பையும் ஏற்காதவர்...

'குக் வித் கோமாளி' சீசன் 5: தொகுப்பாளர்கள், கோமாளிகள் யார் யார்? புதிய புரமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 4 சீசன்கள் முடிவடைந்து 5வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனின் முதல் புரமோ வீடியோ சமீபத்தில் வெளியானது

அடுத்த திருமணத்திற்கு தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்: வனிதா விஜயகுமார்..!

நடிகை வனிதா விஜயகுமாரிடம் ரசிகர் ஒருவர் அடுத்த திருமணம் எப்போது? மறக்காமல் எங்களுக்கு அழைப்பிதழ் கொடுங்கள் என்று கேட்டபோது 'தமிழ்நாட்டுக்கே இன்விடேஷன் கொடுப்பேன்'

ஒரே நாளில் வெளியாகிறதா 'வேட்டையன்' 'கோட்' பட அப்டேட்கள்? ஒரு டிரெண்ட் போட்டி  இருக்குது..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் 'கோட்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகள்