close
Choose your channels

'லவ்வர்' உள்பட 3 தமிழ் படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு குஷி..!

Thursday, March 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ’லவ்வர்’ திரைப்படம் உள்பட 3 தமிழ் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது. மணிகண்டன், கௌரி பிரியா உள்பட பலர் நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் உருவான ’லவ்வர்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று முதல் வெளியாகிறது

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படம் மார்ச் ஒன்றாம் தேதி வெளியான நிலையில் இந்த படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது

மேலும் சபீர், மிர்னா, வரலட்சுமி, இந்திரஜித், பொற்கொடி, தீப்தி உள்பட பலர் நடித்துள்ள ’பர்த் மார்க்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெளியான நிலையில் இந்த படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 தமிழ் படங்களும் இந்த வாரம் வெளியாக இருப்பதால் ஓடிடி ரசிகர்களுக்கு குஷி என தெரிகிறது

மேலும் ஆஹா ஓடிடியில் ‘சுந்தரம் மாஸ்டர்’ என்ற தெலுங்கு படமும், அமேசான் ப்ரைமில் ‘ரேப்பிட் ஆக்சன் மிஷன்’ என்ற தெலுங்கு படமும் வெளியாகிறது. மேலும் சில இந்தி, ஆங்கில படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.