கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட நாயகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் 'கனா', 'சீதக்காதி', 'அடங்கமறு', 'மாரி 2' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியானது தெரிந்ததே. இந்த படங்களுடன் கன்னட படத்தின் டப்பிங் படமான 'கே.ஜி.எப்' என்ற திரைப்படமும் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் கேஜிஎப் திரைப்படத்தின் நாயகன் யஷ் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் திடீரென ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எப்' திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகி சுமார் ரூ.150 கோடி வசூலாகியிருப்பதாகவும், இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்ததாலும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்து வருவதாக கூறப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட

தமிழகத்தில் திரையிட காங்கிரஸ் கட்சி தடை கோரும் திரைப்படம்

திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அந்த திரைப்படத்திற்கு தடை கோரி அரசியல் கட்சிகள் போராட்டம் செய்வது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

முன்னாள் பி.ஆர்.ஓவின் கருத்துக்களை நம்ப வேண்டாம்: விஜய் தரப்பு அறிக்கை

தளபதி விஜய்யின் பி.ஆர்.ஓஆக இருந்த ஒருவர் சமீபத்தில் அளித்த ஒருசில பேட்டிகளில் விஜய்யுடன் ஒருசில நடிகர்களை ஒப்பிட்டும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.

500 ஐடி இளம்பெண்களுக்காக திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்

சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'கனா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே

பிறந்த நாளில் சிம்புவின் இரண்டு படங்கள் ரிலீஸ்?

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்