லார்ட்ஸ் மைதானத்தில் இமாலய வெற்றிப்பெற்ற இந்திய அணி… துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க “மெக்கா ஆஃப் கிரிக்கெட்“ என அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் சீட்டுக்கட்டுப்போல சரிந்த விக்கெட்டுகளுக்கு மத்தியில் ஷமி- பும்ரா ஜோடியின் அசத்தல் ஆட்டத்தையும் சிராஜ்ஜின் விக்கெட் யுக்தியையும் இந்திய ரசிகர்கள் கொண்டாடி திளைத்து வருகின்றனர்.

இதற்கிடையில் சரியான நேரத்தில் முடிவெடுத்த கேப்டன் விராட் கோலியையும் ரசிகர்கள் மறந்து விடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டி, வரலாற்றுச் சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களை எதிர்ப்பதே கடினம் என்று நம்பப்பட்டு வரும் சூழலில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்களை எடுத்திருந்தது. இதில் கே.எல்.ராகுல் அதிகப்பட்சமாக 129 ரன்களைக் குவித்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதனால் ஃபீல்டை விட்டு சென்றுவிட்டார் என்று கூறப்பட்ட விமர்சனத்திற்கு தக்கப்பதிலடி கொடுத்துள்ளார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 391 ரன்களைக் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என நினைத்து களம் இறங்கியது. ஆனால் களத்தில் இறங்கிய ரஹானே 61 ரன்களையும் புஜாரா 45 ரன்களையும் கோலி வெறும் 20 ரன்களையும் ரிஷப் பண்ட் 14 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இஷான் சர்மா 4 ரன்களை எடுத்து விக்கெட்டை இழக்காமல் இருந்தபோது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 181 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

இதனால் டாப் ஆட்டக்காரர்களின் விக்கெட்டை இழந்த இந்திய அணி தோற்பது உறுதி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அடுத்த நாள் ஆட்டத்தில் விளையாட துவங்கிய ரிஷப் பண்ட் 22 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இஷான் சர்மா 16 ரன்களுடன் வெளியேறினார். இப்படி 8 விக்கெட்டுகளை இழந்தபோது ஷமி-பும்ரா ஜோடி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77 ரன்களை குவித்ததால் இந்தியா தற்போது வெற்றியைத் தக்க வைத்திருக்கிறது.

யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஷமி-பும்ரா ஜோடியின் அசத்தலான ஆட்டத்தைப் பார்த்து இங்கிலாந்து வீரர்களே வியந்துபோன சம்பவம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதனால் 298-8 ரன்களுக்கு கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார். இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2 செஷன் கொண்ட ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து இத்தனை ரன்களை அடிக்க முடியுமா? என்பதே கேள்வி. இதனால் டிரா செய்வதற்கான முயற்சியில் இங்கிலாந்து இறங்கியது.

மற்றொரு புறம் இந்தியா இங்கிலாந்தின அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தும் முயற்சியில் இறங்கியது. இந்த சூழலில் இந்திய பவுலர்கள் அசத்தலாக பந்துவீசி 120 ரன்களுக்கு இங்கிலாந்தின் அனைத்து வீரர்களையும் ஆட்டமிழக்க செய்தனர். இதையடுத்து இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சீட்டுக்கட்டுப்போல சரிந்துவிட்ட விக்கெட்டுக்கு மத்தியில் இந்திய அணி வெற்றிப்பெற்று இருப்பது குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

More News

ஹெலிகாப்டர் முழுக்க பணம்… ஆப்கன் அதிபர் தப்பிச்சென்றது குறித்து பரபரப்பு!

ஆப்கானிஸ்தானை விட்டுத் தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கானி நாட்டைவிட்டு கிளம்பும்போது  4 கார்கள் முழுக்க பணத்தை எடுத்துவந்து

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்: சூப்பர் டீலக்ஸ் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு!

பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது தம்பி பாப்பா பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சென்று வா அண்ணா: ஆனந்த கண்ணன் மறைவு குறித்து பாடகியின் உருக்கமான பதிவு!

ஆனந்த கண்ணன் நேற்று இரவு திடீரென காலமானது சின்னத்திரை உலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

நானும் இந்திய பிளேயர் தான்: மைதானத்திற்குள் புகுந்த பார்வையாளரால் பரபரப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு மைதானத்துக்கு வந்த ஒரு பார்வையாளர்

சன் டிவி பிரபலம் ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் பிரபல தொகுப்பாளராகவும் தொலைக்காட்சி தொடர் நடிகராகவும் இருந்த ஆனந்த கண்ணன் திடீரென மறைந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது