close
Choose your channels

எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான்: சூப்பர் டீலக்ஸ் நடிகரின் மகிழ்ச்சியான பதிவு!

Tuesday, August 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தனது தம்பி பாப்பா பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் மகன் ராசுகுட்டி என்ற கேரக்டரில் நடித்தவர் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த். இவரது நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ உட்பட ஒரு சில படங்களில் அஸ்வந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாஸ்டர் அஸ்வந்த் தாயார் அகிலாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.