'இந்தியன் 2' சிங்கிள் பாடல் எப்போது? பாடலின் முதல் வரி இதுதானா?

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணியை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் படமாக்கப்பட்ட சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் பாடல் தான் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலின் டைட்டில் தாத்தா வராரு தாத்தா வராரு என்றும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த படத்தில் இந்த பாடல் தான் முதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் ரிலீஸ் ஆகும் தேதி குறித்து அறிவிப்பு விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் ’இந்தியன் 2’ கொண்டாட்டம் இதன் மூலம் ஆரம்பமாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சென்னை ஸ்டார் ஹோட்டலில் அஜித்-ஷாலினி கொண்டாட்டம்.. ஒரு வாரத்தில் இன்னொரு விசேஷம் இருக்குது..!

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அஜித் - ஷாலினி தங்களது 24 வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அக்கா திருமணத்தின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய அதிதி ஷங்கர்..!

இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல

காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்திய விவகாரம்.. இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி..!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒப்புதல் பெறாமல் பயன்படுத்தியது குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிறை மாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? சகிக்க முடியாமல் காதை பொத்தி கொண்ட அமலாபால்..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கணவரின் பாட்டு தொல்லை

ரஜினி, லோகேஷ் கனகராஜ் சம்பளமே 300 கோடிக்கும் மேல்? 'கூலி' படத்தின் பட்ஜெட் எவ்வளவு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த வீடியோ