'இந்தியன் 2' ரிலீஸ் தேதி இதுவா? அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில வாரங்களாக ’இந்தியன் 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்பட்டது.

’இந்தியன் 2’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படம் ஒரு பான் இந்தியா திரைப்படம் என்பதால் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் ஒரே நாளில் ரிலீசாக இருப்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் மே 24ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓம் நமச்சிவாயா.. ஓம் நமச்சிவாயா.. முழு ஆன்மீகவாதியாக மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா' என பேப்பரில் எழுதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்த ரக்சன் - ஜாக்குலின்.. என்ன ஒரு ஆட்டம்..!

விஜய் டிவி ரக்சன் மற்றும் ஜாக்லின் ஆகிய இருவரும் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் செம

தியேட்டரில் ரீரிலீஸ் மட்டுமல்ல, டிஜிட்டலிலும் ரிலீஸ் ஆகும் 'பையா'.. முழு விவரங்கள்

14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய தலைமுறை

மணப்பெண்ணுக்கு தாலி கட்டும் வீடியோவை வெளியிட்ட பாலாஜி முருகதாஸ்.. கேப்ஷனில் ஒரு டிவிஸ்ட்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் நேற்று தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் நடந்து விட்டதாகவும் இந்த திருமண அறிவிப்பை வெளியிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும் என்று பதிவு செய்த

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ப்ளாக்பஸ்டர் 'ஹனுமான்': தேதி அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் தமிழ், கன்னடம்