close
Choose your channels

அதர்வா அடுத்த படத்தில் அறிமுகமாகும் இன்ஸ்டா பிரபலம்.. லைகா தயாரிப்பு..!

Saturday, May 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான ஒருவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அதர்வா தற்போது ’அட்ரஸ்’ ’தணல்’ மற்றும் ’நிறங்கள் மூன்று’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மூன்று படங்களுமே படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் அதர்வா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்ஸ்டாவில் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிஹாரிகா என்பவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகள் தெரிந்தவர் என்றும், அனைத்திலும் சரளமாக பேசக்கூடிய இவர் ஏராளமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதர்வா ஜோடியாக தமிழில் நாயகியாக நிஹாரிகா அறிமுகமாக இருக்கும் நிலையில் இந்த படம் வெற்றி பெற்றால் அவருக்கு தமிழ் திரை உலகில் அதிக வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment