'பொன்னியின் செல்வன்' பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த சர்வதேச பிரபலம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்றுள்ளார் என்றாலும் ஓய்வு நேரத்தில் அவர் அங்கிருந்து கொண்டே ’பொன்னியின் செல்வன்’ படத்தின் பின்னணி இசை பணிகளை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பிரபல அமெரிக்க இசை கம்போஸர் கிரேக் டெளன்லியுடன் இணைந்து பின்னணி இசை அமைத்து வருகிறார். இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி இசைக்காக ஏஆர் ரஹ்மானுடன் சர்வதேச பிரபலம் ஒருவர் இணைந்துள்ளது அந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 

More News

நான் 99% ஏஞ்சல், அந்த 1%??? செம கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாயிஷா!

நடிகையும் பிரபல நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் 99 சதவீத ஏஞ்சல் என்றும் அந்த ஒரு சதவீதம் என்று கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ள கிளாமர்

'புஷ்பா 2' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 38 வயது தேசிய விருது பெற்ற நடிகை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின்

சினிமா புரியாதவர்கள் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர்: பிரபல இயக்குனரின் சர்ச்சை பேச்சு!

சினிமா பற்றிய புரிதல் இல்லாதவர்கள் தான் தேசிய விருது கமிட்டியில் உள்ளனர் என்றும் அதனால்தான் விருதுக்கு தேர்ந்து எடுக்கும் படங்கள் தகுதியானதாக இல்லை என்றும் பிரபல இயக்குனர் ஒருவர்

ஹீரோக்கள் நள்ளிரவில் வீட்டுக்கு அழைப்பார்கள்: கமல், ஜாக்கிசான் பட நடிகையின் அதிர்ச்சி பேட்டி!

ஹீரோக்கள்  நள்ளிரவில் வீட்டுக்குள் அழைப்பார்கள் என்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது

'விஜயானந்த்' : தமிழில் வெளியாகும் பிரபல தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் 'விஜயானந்த்' என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள