லைகா நிறுவனத்தின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்

  • IndiaGlitz, [Tuesday,October 03 2017]

தளபதி விஜய்யின் 'கத்தி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான படமான '2.0' படத்தை தயாரித்து வருகிறது. அந்தவகையில் இந்த நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படம் 'இப்படை வெல்லும்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் எந்த காட்சிகளையும் சென்சார் அதிகாரிகள் வெட்டாமல், இந்த படத்திற்கு 'UA' சான்றிதழை அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால்  இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 

More News

திலீப் ஜாமீன் மனு: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

பிரபல மலையாள நடிகை ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்வதற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப் 86 நாட்களுக்கு பின்னர் ஜாமீன் கிடைத்துள்ளது.

சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்: உபி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக உலக மக்கள் அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட தாஜ்மஹாலை சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து உத்தரபிரதேச அரசு நீக்கியுள்ளது.

சமந்தா திருமணத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

சமந்தாவுக்கும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வரும் 6ஆம் தேதி மிகச்சிறப்பாக திருமணம் நடைபெறவுள்ளது.

இந்தியன் கமலை முந்துவாரா நாயுடு கமல்?

கடந்த வாரம் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் கமல் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இந்த படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ என்பதும் அறிவிக்கப்பட்டது.

விக்ரம் மகன் அறிமுகமாகும் படத்தின் இயக்குனர் யார்?

சீயான் விக்ரம் மகன் துருவ் தமிழ்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பதும், அந்த படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' என்பதும் ஏற்கனவே தெரிந்ததே