close
Choose your channels

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்திற்கு 'UA' சான்றிதழ்

Tuesday, October 3, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'கத்தி' உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்டமான படமான '2.0' படத்தை தயாரித்து வருகிறது. அந்தவகையில் இந்த நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படம் 'இப்படை வெல்லும்

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் எந்த காட்சிகளையும் சென்சார் அதிகாரிகள் வெட்டாமல், இந்த படத்திற்கு 'UA' சான்றிதழை அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்துவிட்டதால்  இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.