தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் வீடியோகாலில் பார்த்த பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித போக்குவரத்தும் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தனது மறைந்த தாயின் இறுதிச்சடங்கை கண்ணீருடன் வெளியூரில் இருந்து வீடியோவில் பார்த்த செய்தி அனைவரையும் சோகமாக்கியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான்கான். இவரது தாயார் சயிதா பேகம் என்பவர் நேற்று உடல்நலக்குறைவால் ஜெய்ப்பூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. இந்த நிலையில் இர்பான்கான் மும்பையில் இருப்பதால் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் செல்வதற்கு எந்தவித போக்குவரத்தும் இல்லாத்தால் அவரால் இறுதி சடங்கில் பங்குகொள்ள முடியவில்லை.

தாயின் மரணச்செய்தி தெரிந்தாலும் இர்பான்கானால் அவரது இறுதிச்சடங்கில் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தாயின் இறுதிச்சடங்கை தனது மொபைலில் நேரடி வீடியோவாக கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தார். தனது தாய்க்கு அவர்தனது இறுதி மரியாதையையும் வீடியோ மூலமாகவே செய்தார்.

நடிகர் இர்பான்கான் ஏற்கனவே நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் என்ற நோயால் பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவுக்கு பலியான நர்ஸ் பணியாற்றிய இரட்டை சகோதரிகள்: 

இங்கிலாந்தில் உள்ள ஒரு  மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்த இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

தஞ்சை பெரிய கோவில் விவகாரம்: ஜோதிகாவுக்கு ராஜராஜசோழன் வாரிசு எழுதிய கடிதம்

சமீபத்தில் ஜோதிகா கலந்து கொண்ட் ஒரு நிகழ்ச்சியில் அவர் என்ன பேசினார் என்பதையே புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாதவாறு நடித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் 26 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1500க்கும் மேல்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 1554 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்?

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மே மூன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும்,

வடகொரியா அதிபர் இறந்துவிட்டாரா? சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பரபரப்பு செய்தி

அமெரிக்காவுடன் அணு ஆயுத விஷயத்தில் மோதல் போக்கை கடைபிடித்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், அதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும்