விக்கி-நயன் திருமண வீடியோவை கெளதம் மேனன் இயக்குவது உண்மையா? புதிய தகவல்

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்து அதனை தனியார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் கெளதம் மேனன் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்குகள் மற்றும் திருமணத்தின் போது எடுக்கும் வீடியோவுக்கு கௌதம் மேனன் இயக்குனராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவனை வைத்து ஒரு டாக்குமென்டரி படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் அந்த டாக்குமெண்ட் படத்தில் நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த டாக்குமெண்டரி படத்தின் படப்பிடிப்பு திருமணத்திற்கு பின்னர் நடைபெறும் என்றும் இந்த டாக்குமெண்டரி வீடியோ தான் தனியார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே நயன்தாரா திருமண தினத்தன்று எடுக்கும் வீடியோவுக்கு கெளதம் மேனன் தான் இயக்குனர் என்று கூறப்படும் தகவல் தவறானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

More News

பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்!

பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களின்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்திற்கு சமந்தா சென்றாரா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில்

தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நபரை செருப்பால் அடித்த சன்னிலியோன்: வைரல் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தன்னை நீச்சல்குளத்தில் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

விடியற்காலை 3 மணிக்கு நயனுக்கு விக்கி போட்ட மெசேஜ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்

நயன்தாரா திருமணத்திற்காக தனி விமானத்தில் வந்தாரா அஜித்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.