close
Choose your channels

விக்கி-நயன் திருமண வீடியோவை கெளதம் மேனன் இயக்குவது உண்மையா? புதிய தகவல்

Thursday, June 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்து அதனை தனியார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக ஏற்கனவே பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் கெளதம் மேனன் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு நடந்த சடங்குகள் மற்றும் திருமணத்தின் போது எடுக்கும் வீடியோவுக்கு கௌதம் மேனன் இயக்குனராக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவனை வைத்து ஒரு டாக்குமென்டரி படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகவும் அந்த டாக்குமெண்ட் படத்தில் நயன்தாராவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த டாக்குமெண்டரி படத்தின் படப்பிடிப்பு திருமணத்திற்கு பின்னர் நடைபெறும் என்றும் இந்த டாக்குமெண்டரி வீடியோ தான் தனியார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே நயன்தாரா திருமண தினத்தன்று எடுக்கும் வீடியோவுக்கு கெளதம் மேனன் தான் இயக்குனர் என்று கூறப்படும் தகவல் தவறானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.