close
Choose your channels

'லியோ' LCU படமா? படம் பார்த்தவர்கள் சொன்னது என்ன?

Thursday, October 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் LCU படமா என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ’லியோ’ திரைப்படம் LCU என்று குறிப்பிட்டதை அடுத்து இந்த படம் LCU என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி காட்சி பார்த்த ரசிகர்கள் ’லியோ’ படம் LCU தான் என்றும் விக்ரம், கைதி படங்களின் தொடர்பு இருக்கிறது என்று பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ’கைதி’ திரைப்படத்தில் கான்ஸ்டபிள் நெப்போலியன் என்ற கேரக்டரில் நடித்த ஜார்ஜ் மரியான் ’லியோ’ திரைப்படத்தில் உள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மொத்தத்தில் ’லியோ’ திரைப்படம் LCU படம் என்பதை ரசிகர்கள் உறுதி செய்துள்ளதால் படத்திற்கு வேற லெவலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தபிறகும் வரும் ஒரு காட்சியை தவற விட வேண்டாம் என்றும், அதில் ஒரு ஆச்சரியம் இருக்கிறது என்றும், அவசரப்பட்டு எழுந்து வெளியே வர வேண்டாம் என்று சிலர் பதிவு செய்துள்ளனர். அதேபோல் படம் முடிந்தபின்னர் வரும் டைட்டில் கார்டின்போது அனிருத்தின் வேற லெவல் பின்னணி இசை இருப்பதாகவும், அதனை யாரும் மிஸ் செய்ய வேண்டாம் என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos