close
Choose your channels

இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்? மணமகள் யார்?

Friday, July 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'கிரீடம், விஜய் நடித்த 'தலைவா' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய். இவர் நடிகை அமலாபாலை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்னர் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் விரும்பியதாகவும், இதுவரை மறுமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்த விஜய் தற்போது சம்மதம் தெரிவித்திருப்பதால் அவரது பெற்றோர்கள் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஏற்ற மணமகள் விரைவில் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆண்டுக்குள் அவரது திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் விஜய்யின் இரண்டாவது திருமணம் குறித்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று விஜய் தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

விஜய் தற்போது பிரபுதேவா நடித்து வரும் 'லக்ஷ்மி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.