விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாவை விட அதிக சம்பளமா? 'பொன்னியின் செல்வன்' நடிகர் குறித்த வதந்தி!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகருக்கு அந்த படத்தில் மற்ற கேரக்டர்களில் நடித்த விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் ஆகியோர்களை விட அதிக சம்பளம் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. தமிழ் உள்பட 5 மொழிகளில் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அதாவது பொன்னியின் செல்வன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடித்துள்ள ஜெயம் ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் என்று வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்த படத்தில் நடித்த சீனியர் நடிகர்களான விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் கார்த்தியை விட ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் ஜெயம்ரவி நடித்து இருந்தாலும் இந்த படத்தின் உண்மையான கதாநாயகன் கார்த்தி நடித்த வந்தியதேவன் கேரக்டர் தான் என்பது பொன்னின் செல்வன் நாவலை படித்தவர்களுக்குத் தெரியும். ஆரம்பம் முதல் கடைசி வரை வந்தியத்தேவன் கேரக்டருக்குத்தான் அமரர் கல்வி முக்கியத்துவம் கொடுத்திருப்பார். எனவே மற்ற நடிகர்களைவிட பொன்னியின் செல்வன் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம் என்பதை பலர் நம்ப மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இது முழுக்க முழுக்க வதந்தி என்று ஜெயம்ரவிக்கு மற்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கொடுப்பதாக கூறப்படும் தகவலில் உண்மை இல்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

பெங்களூரூவிலும் அசத்திய 'கோப்ரா' படக்குழு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாரான 'கோப்ரா' படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையிலான குழுவினர், பெங்களூரூக்கு சென்றனர்

ரூ.100 கோடி வசூலை நெருங்குகிறதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'? இதோ முழு விபரங்கள்!

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது வாரமாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது. 

ஹீரோவின் திமிர்ப்பேச்சால் தான் படம் ஓடவில்லை: தியேட்டர் அதிபர் காட்டம்!

சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் திமிர் பேச்சால்

3:3:3: 'கோப்ரா' படத்தின் ரன்னிங் டைம் சுவாரஸ்யம்!

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான 'கோப்ரா' படத்தின் ரன்னிங் டைம் தகவலில் ஒரு சுவாரஸ்யம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

'விக்ரம்' படத்தின் மொத்த திரையரங்க வசூல் எத்தனை கோடி? முழு விபரம் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடிக்கும்