'சர்கார்' படத்தின் கதை இதுதானா?

  • IndiaGlitz, [Sunday,October 21 2018]

சர்கார் படத்தின் டீசரில் இருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது குறித்து தங்களது கற்பனைகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டீசருக்கு பொருத்தமாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த ஒரு கதையை தற்போது பார்ப்போம்

வெளிநாட்டில் கார்ப்பரேட் முதலாளியாக இருக்கும் விஜய் ஓட்டு போடுவதற்காக சொந்த நாட்டுக்கு வருகிறார். அப்போது அவரது ஓட்டை யாரோ ஒருவர் கள்ளத்தனமாக போட்டிருப்பதை அறிகிறார். இதனால் ஆத்திரம் அடையும் விஜய் நீதிமன்றத்திற்கு செல்கிறார்.

நீதிமன்றத்தில் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருகிறது. அதனால் மறுதேர்தல் நடைபெறுகிறது. இந்த மறுதேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து விஜய்யே போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அவருடைய வெற்றியால் அரசியல் சூழல் மாறி விஜய்யையே முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் கட்டாயம் வருகிறது. ஒரே ஒரு தொகுதியின் மறுதேர்தல் ஒரு ஆட்சியையே மாற்றிவிடுவதோடு அதன் பின் நடக்கும் அதிரடி அரசியல் மாற்றங்கள் தான் 'சர்கார்' படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த கதை உண்மைதானா? இல்லையா? என்பதை வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு சென்ற ஸ்ரீரெட்டி! ஏன் தெரியுமா?

சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய நடிகை ஸ்ரீரெட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே.

வைரமுத்து-சின்மயி விவகாரம் குறித்து குஷ்பு கூறியது என்ன?

வைரமுத்து மீது சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கள் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை குஷ்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பாட்னா கபடி அணிக்கு அம்பாசிடராக மாறிய விஷால் நாயகி

2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜய்சேதுபதி அம்பாசிடராக இருக்கின்றார் என்பது தெரிந்ததே

நயன்தாராவின் 'ஐரா' படம் குறித்த புதிய தகவல்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐரா'. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இன்னொரு மீடூ குற்றச்சாட்டு: தியாகராஜன் மீது திடுக்கிடும் புகார் அளித்த இளம்பெண்

நடிகர் பிரசாந்த் தந்தையும் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் மீது இளம்பெண் ஒருவர் திடுக்கிடும் மீடூ குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.