விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார்: நடிகையின் பாலியல் புகாருக்கு இயக்குனர் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்தபோது தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டின் பிரபல நடிகை ஏசியா அர்ஜெண்டோ. இவர் சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, 'இதே கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள கடந்த 1997ஆம் ஆண்டு நான் வந்திருந்தபோது என்னை தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது எனக்கு வயது 21 என்பதால் அவரை எதிர்த்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளில் அவர் கூறியபடியெல்லாம் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். இல்லையெனில் என் கேரியரை அவர் நாசமாக்கிவிடுவார் என்பதை அறிந்தேன்' என்று கூறினார்.

நடிகை ஏசியா அர்ஜெண்டோ குற்றச்சாட்டால் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஏசியாவின் குற்றச்சாட்டை மறுத்த இயக்குனர் ஹார்வியின் வழக்கறிஞர், 'நடிகை ஏசியா இயக்குனர் ஹார்வியுடன் விருப்பப்பட்டு தான் உறவு கொண்டார். அதன்பின்னர் ஹார்வி தயாரித்த 'பி மங்கீ' என்ற படத்தில் நடித்ததில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம்' என்று கூறினார்.

More News

முதலமைச்சர் எப்படி இறந்தார் என்பதே நமக்கு தெரியாது: சிம்பு

விவேக் நடித்த 'எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், கார்த்தி, சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

'மும்பை தோற்றதில் மகிழ்ச்சி' ப்ரித்தி ஜிந்தாவின் வைரல் வீடியோ

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று 2 முக்கிய போட்டிகள் நடைபெற்றது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கும்.

பாலகுமாரன் குடும்பத்துக்கு கமல் நேரில் ஆறுதல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த 15ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு எழுத்துலகம் மற்றும் திரையுலகம் ஆகியவற்றுக்கு பெரும் இழப்பாக கருதப்பட்டது.

சுஜாவருணி குறிப்பிட்ட 'அத்தான்' நான் தான்! உறுதி செய்த நடிகர்

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை சுஜாவருணி, சிவாஜிகணேசன் பேரனும் ராம்குமார் மகனுமாகிய சிவாஜிதேவ்வை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.

கர்நாடகத்திற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு குமாரசாமி அழைப்பு

எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் புதிய முதல்வராக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.