close
Choose your channels

அது ஃபேக் புகைப்படம், யாரும் கவலைப்பட வேண்டாம்.. நடிகர் ஜாக்கிசான்

Monday, April 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஜாக்கிசான் அவர்களுக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் சமீபத்தில் அவரது வயதான தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கமல், ரஜினி ஆகியோர்களுக்கும் 70 வயதானாலும் அவர்கள் இன்னும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருக்கும் நிலையில் அதே வயதான ஜாக்கிசான் மிகவும் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் தங்கள் கவலையை தெரிவித்திருந்தனர்.

ஆனால் இது குறித்து ஜாக்கிசான் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’சமீபத்தில் வெளியான என்னுடைய புகைப்படத்தை பார்த்து இணையத்தில் பலரும் கவலை அடைந்ததாகவும், எனது உடல்நிலை குறித்து விசாரித்து வருவதையும் அறிகிறேன்.

தயவு செய்து யாரும் வருத்தப்பட வேண்டாம் அந்த புகைப்படம் உண்மையானது அல்ல, நான் ஒரு படத்தில் வயதான கேரக்டரில் நடித்து வருகிறேன், அதற்காக போடப்பட்ட வேஷம் தான் அந்த புகைப்படம். எனவே அந்த படத்திற்கான தோற்றத்தை வைத்து இதுதான் எனது உண்மையான தோற்றம் என்று தவறாக நினைக்க வேண்டாம். எப்போதுமே புதிய விஷயங்களை முயற்சிப்பது எனக்கு பிடிக்கும் என்பதால் அந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஜாக்கிசானின் இந்த விளக்கத்தை எடுத்து அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அதில் அவர் இளமையாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யாவின் ’கங்குவா’ நாயகி நடிகை திஷா பதானி, சமீபத்தில் ஜாக்கிசான் உடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ’ஆமாம் ஜாக்கி சான் சொல்வது உண்மைதான், அவர் இன்னும் இளமையாக தான் இருக்கிறார்’ என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.