நடக்குற நடை புயலாச்சே.. 'ஜெயிலர்' இசை வெளியிட்டு விழா தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,July 22 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, நெல்சன், அனிருத், ரம்யா கிருஷ்ணன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் கங்கனா ரனாவத்? இயக்குவது இந்த சூப்பர்ஹிட் பட இயக்குனரா?

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல்

கமல்ஹாசனுடன் இனியாவது நடிக்க வாய்ப்பு உள்ளதா? நதியாவின் க்யூட் பதில்..!

நடிகை நதியா தமிழ் சினிமாவில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். இடையில் சில ஆண்டுகள் இடைவெளி விட்டாலும் அவர் தமிழ் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது

அந்தரத்தில் குதிக்கும் அமலாபால்.. லேட்டஸ்ட் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை அமலாபால் கிட்டத்தட்ட  மூன்று மாதங்களுக்கு மேல் சமூக வலைதளத்தில் எந்த பதிவும் செய்யாமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தான் அவர் மீண்டும் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

தயவு செய்து இதை மட்டும் யாரும் நம்ப வேண்டாம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவிப்பு..!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் 'தயவுசெய்து இதை நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

டீசருக்கே ஒரு டீசரா? 'ஜெயிலர்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடந்த சன் பிக்சர்ஸ்