close
Choose your channels

நடக்குற நடை புயலாச்சே.. 'ஜெயிலர்' இசை வெளியிட்டு விழா தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு..!

Saturday, July 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, நெல்சன், அனிருத், ரம்யா கிருஷ்ணன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment