'ஜெயிலர்' படத்தின் சிங்கிள் பாடல்.. தமன்னாவுக்காக கம்போஸ் செய்த அனிருத்..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் நெல்சன் வெளியிடும் புரோமோ வீடியோவில் காமெடி காட்சிகள் இருப்பது போல இந்த புரோமோ வீடியோவிலும் அனிருத் மற்றும் நெல்சனின் காமெடி காட்சிகள் உள்ளது.

அருண் ராஜா காமராஜ் எழுதிய பாடலுக்கு அனிருத் கம்போஸ் செய்யும் ’காவாலா’ என்ற பாடல் தமன்னாவுக்காக உருவாக்கப்பட்டது என்பது இந்த புரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. . மேலும் இந்த சிங்கிள் பாடல் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

More News

கமல் கிட்ட மறக்க முடியாத விஷயம் - அமலா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது .

'மாமன்னன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? உதயநிதி கடைசி படத்தின் சாதனை..!

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் திருநாளில் வெளியாகியது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக பாசிட்டிவ்

சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

இந்த நிலையில் தற்போது சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

திமுகவில் சாதிய பாகுபாடு..! பா.ரஞ்சித் கருத்துக்கு பதில் அளித்த உதயநிதி..!

இயக்குனர் பா.ரஞ்சித் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நிலையில் அதில் 'திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார்,