close
Choose your channels

'ஜெயிலர்' படத்தின் சிங்கிள் பாடல்.. தமன்னாவுக்காக கம்போஸ் செய்த அனிருத்..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கம் போல் நெல்சன் வெளியிடும் புரோமோ வீடியோவில் காமெடி காட்சிகள் இருப்பது போல இந்த புரோமோ வீடியோவிலும் அனிருத் மற்றும் நெல்சனின் காமெடி காட்சிகள் உள்ளது.

அருண் ராஜா காமராஜ் எழுதிய பாடலுக்கு அனிருத் கம்போஸ் செய்யும் ’காவாலா’ என்ற பாடல் தமன்னாவுக்காக உருவாக்கப்பட்டது என்பது இந்த புரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. . மேலும் இந்த சிங்கிள் பாடல் ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.