'ஜெயிலர்' வசந்த் ரவியின் அடுத்த படத்தில் அஜித் பட நடிகை தான் நாயகியா? இன்னொரு ஹீரோயின் யார்?

  • IndiaGlitz, [Friday,August 11 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என்றும் தமிழ் திரை உலகில் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மகனாக ஒரு சிறு கேரக்டரில் நடிகர் வசந்த் ரவி நடித்திருந்தார் என்பதும் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறும் வகையில் அவரது நடிப்பு இருந்தது என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் வசந்த ரவி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வசந்த் ரவி நாயகனாக நடிக்க உள்ள இந்த படத்தில் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருபவருமான அனிகா சுரேந்திரன் நடிக்க உள்ளார்.



மேலும் இந்த படத்தில் நடிகை மெஹ்ரீன் பிர்ஜிதா இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’நெஞ்சில் துணிவிருந்தால்’ ’பட்டாசு’ ’நோட்டா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சபரீஷ் நந்தா என்பவர் இயக்கி வருவதாகவும் ’சொப்பன சுந்தரி’ படத்துக்கு இசையமைத்த அஜ்மல் தாசின் இசையமைத்து வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

இளம் இசையமைப்பாளர், பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்கிறாரா? வேகமாக பரவும் வதந்தி..!

தமிழ் திரை உலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் ஒருவர் பிரபல தொழிலதிபர் மகளை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில்  ஒரு செய்தி வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா? விஷால் அளித்த விளக்கம்..!

நடிகர் விஷால், நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்ய போவதாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்முறையாக இணையும் கமல்ஹாசன் - விஜய்.. 2ஆம் பாகத்தை பிரமாண்டமாக்க திட்டம்..!

முதல் முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்த படம் விஜய் நடித்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் 3 வயது மகனும் ரஜினி ரசிகரா? க்யூட் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மூன்று தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. அவரது வயதை உடையவர்கள், அவர்களுடைய மகன்கள், பேரன்களும் ரசிகர்களாக உள்ளனர்

நீண்ட இடைவெளிக்கு பின் பான் - இந்திய படம் இயக்கும் அர்ஜுன்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிகர் மட்டுமின்றி சில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் அவர் இயக்கத்தில் உருவான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது தெரிந்தது. அந்த வகையில் தற்போது  நீண்ட இடைவெளிக்கு பின்