close
Choose your channels

'ஜெயிலர்' வசந்த் ரவியின் அடுத்த படத்தில் அஜித் பட நடிகை தான் நாயகியா? இன்னொரு ஹீரோயின் யார்?

Friday, August 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படம் மிகப்பெரிய வசூலை எட்டும் என்றும் தமிழ் திரை உலகில் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் மகனாக ஒரு சிறு கேரக்டரில் நடிகர் வசந்த் ரவி நடித்திருந்தார் என்பதும் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெறும் வகையில் அவரது நடிப்பு இருந்தது என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் வசந்த ரவி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வசந்த் ரவி நாயகனாக நடிக்க உள்ள இந்த படத்தில் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ ’விஸ்வாசம்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருபவருமான அனிகா சுரேந்திரன் நடிக்க உள்ளார்.



மேலும் இந்த படத்தில் நடிகை மெஹ்ரீன் பிர்ஜிதா இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே ’நெஞ்சில் துணிவிருந்தால்’ ’பட்டாசு’ ’நோட்டா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சபரீஷ் நந்தா என்பவர் இயக்கி வருவதாகவும் ’சொப்பன சுந்தரி’ படத்துக்கு இசையமைத்த அஜ்மல் தாசின் இசையமைத்து வருவதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.