ஒரே ஒரு மனுஷன்.. ஒரே ஒரு பாபா ரஜினி சார்.. 'ஜெயிலர்' வில்லன் விநாயகன் பேட்டி..!

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியின் நடிப்பை அடுத்து வில்லன் விநாயகன் நடிப்பு பரபரப்பாக பேசப்பட்டது என்பதும் இந்த படத்தில் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம், படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து விநாயகன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ‘ஜெயிலர்’ படத்தின் நடிப்பதற்காக எனக்கு அழைப்பு வந்த போது நான் காடுகளில் இருந்தேன். 15 நாட்கள் நான் காடுகளில் இருந்ததால் எனக்கு நெட்வொர்க் காரணமாக எந்த போன் அழைப்பும் வரவில்லை

அதன்பிறகு தான் என்னுடைய மேனேஜர், நெல்சன் அலுவலகத்திலிருந்து கால் வந்தது என்று சொன்னார். நான் மீண்டும் அவரிடம் பேசிய போது ’ரஜினி சார் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, நீங்கள்தான் முக்கிய வில்லன் என்று சொன்னார்கள், அதன் பிறகு நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை, படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். மிகப்பெரிய நிறுவனம், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் உடன் நடிப்பதில் ஏன் கேள்வி கேட்க வேண்டும்’ என்று தெரிவித்தார்

இதனை அடுத்து ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறிய போது ’அந்த அனுபவத்தை சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. ரஜினி படத்தில் எனக்கு அவ்வளவு பெரிய கேரக்டர் கொடுத்தார்கள், டச் பண்ண முடியாத உயரத்தில் இருக்கும் ரஜினியுடன் நடிப்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு எனர்ஜி கொடுத்தார். அவர் ஒரே ஒரு மனுஷன் ஒரே ஒரு பாபா’ என்று கூறினார்.

மேலும் ‘என்னிடம் நெல்சன் கதை சொல்லும்போது வர்மன் கேரக்டர் பற்றி மட்டுமே சொன்னார். முழு ஸ்கிரிப்டை அவர் சொல்லவில்லை, நானும் கேட்கவில்லை. ஆனால் படம் பார்த்தபோது எனது கேரக்டருக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் இருந்ததை புரிந்து கொண்டேன். நெல்சன் அவர்களுக்கு நன்றி’ என்று கூறினார்.

மேலும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் உங்களது காட்சிகளில் எது பிடித்தமானது என்று கேட்டபோது 'ஒவ்வொரு காட்சியையும் நன்றாக ரசித்து நடித்தேன், எந்த ஒரு காட்சி என்றும் குறிப்பிட்டு சொல்ல முடியாது, அனைத்து காட்சிகளுமே எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த நெல்சன் அவர்களுக்கு எனது மிகப்பெரிய நன்றி, ரஜினி அவர்களுக்கும் நன்றி, அவருடன் இணைந்து நடித்ததை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

More News

கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி.. ஆனால் ஜோதிகா அப்படியில்லை.. ராகவா லாரன்ஸ்..!

'சந்திரமுகி 2' படத்தில் கங்கனா ஒரிஜினல் சந்திரமுகி கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் ஆனால் சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டு  நடித்திருந்தார் என்று ராகவா லாரன்ஸ்

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என 3 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

இந்தியாவை பாரத் என அழைக்க வேண்டும் என மூன்று வருடங்களுக்கு முன்பே நான் கூறியிருக்கிறேன் என்று 'சந்திரமுகி 2' படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தை நிகழ்காலத்திலேயே காண்பேன் என்று நினைக்கவில்லை: 'பாரத்' குறித்து கபிலன் வைரமுத்து

இந்தியா என்ற நம் நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து தனது கருத்தை கபிலன் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.  

மீண்டும் தள்ளிப்போகிறதா சிவகார்த்திகேயனின் 'அயலான்'? 2 பெரிய படங்களுடன் மோதுகிறதா?

சிவகார்த்திகேயன் நடிப்பில்,  ரவிக்குமார் இயக்கத்தில் உருவான 'அயலான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதிக்கே எனது ஆதரவு: ரஜினி பட இயக்குனர் அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. உதயநிதிக்கு