ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகள் மட்டுமே....! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு....!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

இனி வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளுக்கு மட்டும், அனுமதி தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருடாவருடம் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில், கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்காமல் தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன்னிலையில் இன்று விசாரணை செய்யப்பட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் கூறியிருப்பதாவது,ஜல்லிக்கட்டு போட்டிகளில் இனி வரும் காலங்களில் கலப்பின மாடுகள் பங்கேற்க கூடாது. மேலும் போட்டிகளில் அனுமதிக்க கூடிய மாடுகள், நாட்டு மாடுகள் தான் என்று கால்நடை மருத்துவர்களின் சான்று பெற வேண்டும். தமிழக அரசு 'நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், கலப்பின வகையில் பிறக்கும் செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்கவும்' பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டுள்ளனர்.

More News

8 வருட கடின உழைப்பு.... இதனால் வாய்ப்புகள் பறிபோனது....! பிரபல சீரியல் நடிகர் பேட்டி....!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "வேலைக்காரன்" என்ற  சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர்

'எனிமி' படத்தின் அடுத்தகட்ட பணி: விஷால் வெளியிட்ட வீடியோ!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த 'எனிமி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை போலீஸ் கமிஷனரை திடீரென சந்தித்த ஆர்யா: என்ன காரணம்?

ஆர்யா மீது இலங்கையைச் சேர்ந்த ஜெர்மன் வாழ் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரை ஆர்யா திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு: மணிரத்னம் மீது வழக்கு!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

ரஷ்யாவில் அஜித் செய்யவிருக்கும் சாதனை: 'வலிமை' முடிந்தபின்னரும் திரும்பாததற்கு இதுதான் காரணம்!

தல அஜித் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'வலிமை' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றார் என்றும் அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும்